Home Featured உலகம் அமெரிக்க பயணத்தை முடித்து சவுதி அரேபியா சென்றார் மோடி!

அமெரிக்க பயணத்தை முடித்து சவுதி அரேபியா சென்றார் மோடி!

591
0
SHARE
Ad

Sauidi-minவாஷிங்டன் – அமெரிக்காவில் இரண்டு நாட்கள் நடைபெற்ற அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியா சென்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பெல்ஜியம், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

பெல்ஜியம் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா சென்ற மோடி, அங்கு நடைபெற்ற இரண்டு நாள் அணு சக்தி பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டார்.
அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் இரண்டு நாட்களாக நடைபெற்ற 4–ஆவது அணு பாதுகாப்பு உச்சி மாநாட்டில் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் 50–க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், தனது இரண்டு நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, மோடி சவுதி அரேபியா சென்றுள்ளார். இரண்டு நாட்கள் பயணமாக சவுதி அரேபியா செல்லும் பிரதமர் மோடி, அங்கு பயங்கரவாதத்தை எதிர்கொள்வது, வர்த்தகம், அணு ஆற்றல் உள்ளிட்ட விவகாரங்களில் இருநாட்டு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்த உள்ளார்.

#TamilSchoolmychoice

பயணத்தின் முக்கிய நிகழ்வாக, சவுதி மன்னர் சல்மான் பின் அப்துலஜிஸ் அல்-சவுட் உடன் மோடி சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சவுதி அரேபியா கிளம்புவதற்கு முன்பாக, பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோவை சந்தித்து பேசினார்.

மேலும் சுவிஸ் நாட்டு அதிபர் ஜோகன் இசுனைடர்-அம்மான், கஜகஸ்தான் அதிபர் நர்சல்தான் நசர்பயேவ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களையும் அவர் சந்தித்து பேசினார்.