Home Featured உலகம் மார்க் சக்கர்பெர்க் அறை ‘மீன் தொட்டி’ – பேஸ்புக் தலைமையகத்தில் நடந்த சுவாரஸ்யம்!

மார்க் சக்கர்பெர்க் அறை ‘மீன் தொட்டி’ – பேஸ்புக் தலைமையகத்தில் நடந்த சுவாரஸ்யம்!

723
0
SHARE
Ad

Markமென்லோபார்க் (கலிபோர்னியா) – உலக முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்களின் தினமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நேற்று பேஸ்புக் தலைமையகத்தையும் இந்தக் கொண்டாட்டம் விட்டு வைக்கவில்லை.

பேஸ்புக் தலைமைச் செயல் அதிகாரி மார்க் சக்கர்பெர்க்கின் அறையை, ஒரு பெரிய மீன் தொட்டியைப் போல் மாற்றி, அவரை ஆச்சர்யப்படுத்திவிட்டனர் பேஸ்புக் ஊழியர்கள்.

இது குறித்து மார்க் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “என்னுடைய சந்திப்பு அறையை (conference room) ‘மீன் தொட்டி’ என்று விளையாட்டாகக் கூறுவார்கள் எனது குழுவினர். காரணம் அதன் சுவர் முழுவதும் கண்ணாடியால் ஆனது. உள்ளே நான் என்ன வேலை செய்கிறேன் என்பதை மக்கள் பார்க்க முடியும். வெளிப்படையாக இருப்பது எமது கலாச்சாரத்துடன் ஒத்துப்போகின்றது”

#TamilSchoolmychoice

“முட்டாள்களின் தினத்தன்று, என்னுடைய அறை முழுவதையும் ‘மீன்தொட்டி’ போல் காகிதங்களால் சுற்றிவிட்டனர். நான் கதவைத் திறக்கும் போது தண்ணீரும், மீனும் என் மீது விழக்கூடும் என்று எதிர்பார்த்திருந்தேன்.”

“முந்தைய வருடங்களில், என்னுடைய அறை முழுவதையும் பந்துகள் மற்றும் பலூன்களால் நிரப்புவார்கள். ஆனால் இதுவரையில் இல்லாத வகையில் இந்த முறை தான் எனக்கு மிகப் பெரிய பரிசு கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்லுவேன். நன்றி தோழர்களே! அனைவருக்கும் எனது இனிய முட்டாள் தின வாழ்த்துகள்” என்று மார்க் சக்கர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.