Home Featured கலையுலகம் நட்சத்திர கிரிக்கெட் மூலம் ரூ.13 கோடி திரட்ட திட்டம்!

நட்சத்திர கிரிக்கெட் மூலம் ரூ.13 கோடி திரட்ட திட்டம்!

562
0
SHARE
Ad

Celebrity-cricketசென்னை – நட்சத்திர கிரிக்கெட்டில் 8 அணிகளில் விளையாடும் 48 நடிகர்களின் அறிமுக கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. இந்த போட்டி மூலம் ரூ.13 கோடி நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளனர். நடிகர் சங்க கட்டிட நிதி திரட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி வரும் 17-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இதில் கலந்துகொள்கிறார்கள். இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, நாகார்ஜுனா, மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட இதர மொழி நடிகர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

நட்சத்திர கிரிக்கெட்டில் மொத்தம் 8 அணிகள் மோத உள்ளன. ஒவ்வொரு அணியிலும் தலா 6 நடிகர்கள் வீதம் 48 நடிகர்கள் விளையாடுகிறார்கள். இந்த போட்டி 6 ஓவர்களை கொண்டதாக இருக்கும்.

#TamilSchoolmychoice

காலை 9 மணிக்கு போட்டிகள் தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெறும். நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி, ஆர்யா, ஜெயம்ரவி, ஜீவா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் அணிகளின் கேப்டன்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த 8 அணிகளின் தூதுவர்களாக நயன்தாரா, திரிஷா, சமந்தா, அமலாபால், ஹன்சிகா, காஜல் அகர்வால் ஸ்ரீதிவ்யா, வரலட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட உள்ளனர். 8 அணிகளுக்கும் சென்னை சிங்கம்ஸ், மதுரை காலேஜ், திருச்சி டைகர்ஸ், கோவை கிங்ஸ், சேலம் சீட்டாஸ், தஞ்சை வாரியர்ஸ், நெல்லை டிராகன்ஸ், ராமநாடு ரைனோஸ் என்று மாவட்டங்களின் பெயர்கள் சூட்டப்படுகின்றன.

இந்த அணிகளுக்கு கேப்டன்கள் யார் என்பது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. நட்சத்திர கிரிக்கெட் ‘சேட்டிலைட்’ உரிமை மற்றும் டிக்கெட் கட்டணங்களை சேர்த்து ரூ.13 கோடி நிதி திரட்ட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கிரிக்கெட்டில் விளையாடும் அணிகளின் அறிமுக கூட்டம் நாளை 3-ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் போட்டியில் விளையாடும் 48 நடிகர்களும் தூதராக நியமிக்கப்படும் 8 நடிகைகளும் கலந்துகொள்கிறார்கள். நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர்.