Home Featured கலையுலகம் யாருக்கும் பாரபட்சம் காட்டவில்லை – நடிகை ராதிகா குற்றச்சாட்டுக்கு நாசர் பதில்!

யாருக்கும் பாரபட்சம் காட்டவில்லை – நடிகை ராதிகா குற்றச்சாட்டுக்கு நாசர் பதில்!

827
0
SHARE
Ad

radika(1)சென்னை – தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிட நிதிக்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் கடந்த ஞாயிறு 17-ஆம் தேதியன்று நடைபெற்றது. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாகார்ஜுனா, சிவராஜ்குமார் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, ஜீவா, ஆர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான அணிகள் போட்டியிட்டன. இந்த கிரிக்கெட் நிகழ்ச்சிக்கு சரத்குமார் அணியிலிருந்து விஜயகுமார், ராம்கி, நிரோஷா ஆகியோர் மட்டுமே கலந்துகொண்டார்கள்.

இதுகுறித்து ராதிகா சரத்குமார் டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: சரத்குமாரும்-ராதாரவியும் நடிகர் சங்கத்துக்காக தங்கள் நேரத்தைச் செலவழித்துள்ளார்கள். அவர்களை நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு அழைத்திருந்தால் உங்கள் முதிர்ச்சியான அணுகுமுறை வெளிப்பட்டிருக்கும்.

#TamilSchoolmychoice

இதைவிடவும் பெரிய நிகழ்ச்சியை சங்கத்துக்காகவும் நாட்டுக்காக அவர்கள் நடத்தியுள்ளார்கள். அவர்களை நீங்கள் அழைக்காததால் உங்களுக்குக் கெட்ட பெயர் கிடைத்துள்ளது. நீங்கள் என்னையும் நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை. சுவர் இல்லாமல் சித்திரம் இல்லை என்று குறிப்பிட்டார்.

ராதிகாவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர் பதிலளித்து கூறியதாவது: அவர்கள் அணியைச் சேர்ந்த சிலரும் நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். இவர்களுக்கு அனுப்பவேண்டும், அவர்களுக்கு அனுப்பக்கூடாது என்று அழைப்பிதழ் அனுப்புவதில் பாரபட்சம் காண்பிக்கவில்லை.

விஜயகுமாருக்கு அழைப்பிதழ் தாமதமாகச் சென்றபோதும் சூழல் புரிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். எனவே நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுப்பதில் யாருக்கும் பாரபட்சம் காண்பிக்கப்படவில்லை என்றார்.