Home Featured தமிழ் நாடு அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததாக பிரேமலதா மீது வழக்கு!

அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததாக பிரேமலதா மீது வழக்கு!

753
0
SHARE
Ad

peramalathaதூத்துக்குடி – தூத்துக்குடியில் அனுமதி பெறாத இடத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ததாக தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா ஆகிய கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி மலர்ந்துள்ளன. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் சார்பில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த், வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா கடந்த 17-ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அக்கட்சியினர் தாளமுத்து நகர் வழியாக செல்ல அனுமதி பெற்றிருந்தனர்.

#TamilSchoolmychoice

ஆனால் அங்கு பேசுவதற்காகவும், பிரச்சாரம் செய்யவும் அனுமதி பெறவில்லை. இந்த நிலையில் 17-ஆம் தேதி அந்த வழியாக பிரேமலதா வந்து திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். இதுகுறித்து அறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி நவசுப்பிரமணியன் தாளமுத்து நகர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் பிரேமலதா மீது தேர்தல் வீதிமுறைகளை மீறியும், அனுமதி பெறாமலும் பிரச்சாரம் செய்ததாக 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தேமுதிகாவை சேர்ந்த நடிகர் ராஜேந்திரநாத் மீது தென்பாகம் போலீசார் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.