சென்னை – ஐந்தரை கோடி ரூபாய் வங்கி கடனைக் கட்டாததால், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி விஜயகாந்தின் கல்லூரி மற்றும் வீடுபறை ஏலத்துக்கு விட முடிவெடுத்துள்ள நிலையில் வங்கிக் கடன்களை முறையாக அடைத்து, சொத்துகளை மீட்போம் என விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா அறிவித்துள்ளார்.
“எங்களின் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருப்பதால் 2 மாதம் கால அவகாச நீட்டிப்பை வங்கியிடம் கேட்டிருந்தோம். எனினும் அவர்கள் ஏற்கனவே போதிய அவகாசம் தரப்பட்டிருப்பதாகக் கூறி நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அந்த நடவடிக்கையை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்” என பிரேமலதா கூறியிருக்கிறார்.
“நாங்கள் நேர்மையாக நடந்து கொண்டிருப்பதால்தான் எங்களுக்கு சோதனைகள் வருகிறது. சட்டரீதியாக இந்தப் பிரச்சனையில் இருந்து மீண்டு வருவோம். நாங்கள் நடத்தி வந்த கல்யாண மண்டபமும் இடிக்கப்பட்டுவிட்டது. எங்களின் வருமானமும் குறைந்துவிட்டது. எனினும் கஷ்டப்பட்டு வங்கிக் கடன்களை அடைப்போம்” என பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது பிரேமலதா தெரிவித்தார்.