Home வணிகம்/தொழில் நுட்பம் பேராக் மாநில தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி

பேராக் மாநில தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி

2251
0
SHARE
Ad

ஈப்போ – பேராக் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, நேற்று ஜூன் 22-ஆம் தேதி   (சனிக்கிழமை) மலேசிய அருள் ஒளி மன்றம், பேராக்கில் சிறப்பாக நடைபெற்றது. 

பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ.சிவநேசன் அச்சலிங்கம் அவர்களின் சிறப்பு அதிகாரி திரு. முத்துசாமி உத்திராபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவர் தம் உரையில் “கணினிக் கல்வியைக் கொண்டு, ஒருவரின் சுயத்தொழிலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், தொடர்ந்து தொழில்நுட்ப புரட்சியில் இளைஞர்கள் அவர்களை ஈடுபடுத்திக் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொண்டு, வாழ்க்கையில் வெற்றி அடைய முடியும். மேலும் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப திறனறிவு இருந்தால் உலகில் எங்கு இருந்தாலும் கணினி திறன் கருவிகளையும், தொழில்நுட்பங்களையும் இயக்க முடியும்” என்று கூறினார்.

#TamilSchoolmychoice

அடுத்த ஆண்டு பேராக் மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளையும் இத்தகைய  போட்டிகளில் கலந்துக் கொண்டு அவர்களின் திறனறிவை மேன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இன்றைய போட்டியில் பங்கேற்ற அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரிய குழுவினர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

பேராக் மாநில நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்ப புதிர்ப் போட்டியை பேராக் மாநில நிலையில் சிறப்பாக நடைபெற ஆதரவு அளித்த பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் வாரியத்திற்கும், பேராக் மாநில அரசுக்கும் மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தனது நன்றியை தெரிவித்து கொண்டு , இப்போட்டியை சிறப்பாக ஏற்பாடு செய்த மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கத்திற்கு, அவர்தம் குழுவினர்களுக்கும் தனது நன்றியைக் கூறி நிறைவு செய்தார்.

இவ்வாண்டு பேராக் மாநிலத்திலிருந்து இருந்து சுமார் 98 மாணவர்களும் 31 பள்ளிகளும் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.

தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டியில் மொத்தம் 5 போட்டிகள் உள்ளன. அதில் புதிர்ப்போட்டி மாநில நிலையில் நடத்தப்பட்டு, தேசிய நிலைக்கு மாணவர்கள் தேர்வு பெறுவர். தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியில் இருபரிமாண அசைவூட்ட போட்டி, வரைதல் போட்டி, அகப்பக்கம் வடிவமைத்தல் போட்டி, & ஸ்கேரேட்ஸ் போட்டிகள் ஆகியவை நடைபெற்று மாநில நிலையில் மாணவர்கள் தேர்வு பெற்று, தேசிய நிலையிலான போட்டியில் மாணவர்கள் கலந்துக் கொண்டு சிறந்த படைப்பை வழங்குவர்.

தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி மலாயா பல்கலைகழக வளாகத்தில் நடைப்பெறும்.பேராக் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்கள்:

PERAK STATE LEVEL ICT QUIZ WINNERS 2019

  1. நிஷாந்திகா வாசுதேவன்  சென். தெரேசா கொன்வண்ட் தமிழ்ப்பள்ளி
  2. தஷன் மணிமாறன் பீடோர் தகான் தமிழ்ப்பள்ளி
  3. வேங்கடேஷ் சந்தியமூர்த்தி சென். தெரேசா கொன்வண்ட் தமிழ்ப்பள்ளி
  4. தான்யா லெட்சுமி சென். தெரேசா கொன்வண்ட் தமிழ்ப்பள்ளி
  5. நவ ஶ்ரீ குஹநாத் பத்தாங் ராபிட் தமிழ்ப்பள்ளி
  6. ஜசிட்ர ஶ்ரீ வாசு சூன் லீ தமிழ்ப்பள்ளி
  7. தீனேஸ் ராஜ் செல்வம்  பீடோர் தாகான் தமிழ்ப்பள்ளி
  8. சிவபிரசாத் ரெட்டி சரவணன்     பனபுடேன் தமிழ்ப்பள்ளி
  9. டாமீன் ஸ்திவ் ஜான்சன் கோப்பேங் தமிழ்ப்பள்ளி
  10. விலோஷினி சுந்தர்ராஜன் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி
  11. கௌதம் முனியாண்டி கீர் ஜொஹாரி
  12. ஹரிஸ் கென்னடி கீரிக் தமிழ்ப்பள்ளி
  13. வேர்சா முரளி கிலேபாங் தமிழ்ப்பள்ளி
  14. கவிஷா பாலமுரளி தாபாக் தமிழ்ப்பள்ளி
  15. கயல்விழி மணிமாறன் கெரோ தமிழ்ப்பள்ளி
  16. முகிலன் முணியான்டி மெத்தடிஸ் தமிழ்ப்பள்ளி
  17. மெல்வின் ராஜ் கேன்னாகன் பத்தாங் ராபிட் தமிழ்ப்பள்ளி
  18. குகன் ஹரிசந்திரன் பாகான் செராய் தமிழ்ப்பள்ளி
  19. நேசராணி விக்டர் சென் பிலோமீனா தமிழ்ப்பள்ளி
  20. சத்திஸ் கௌண்டர் வடிவேலு கீர் ஜோஹாரி தமிழ்ப்பள்ளி

மேற்காணும் பட்டியல் பேராக் மாநில அளவிலான போட்டியில் வெற்றிப்பெற்ற முதல் 20 நிலை வெற்றியாளர்களின் பட்டியல் ஆகும். இம்மாணவர்கள் தேசிய நிலை போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.