Home Featured தமிழ் நாடு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்; மதுரையில் கூடிய லட்சக்கணக்கான பக்தர்கள்!

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்; மதுரையில் கூடிய லட்சக்கணக்கான பக்தர்கள்!

931
0
SHARE
Ad

kallazhagarமதுரை – மதுரை சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை 7 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி மதுரை நகரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

அழகர்மலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கள்ளழகர் ஆண்டு தோறும் சித்ரா பெளர்ணமி அன்று மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிப்பார். இத்திருவிழா புராணகாலந்தொட்டே நடந்துவருகிறது.

festival2சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை 7 மணிக்கு நடைபெற்றது. மதுரை நகர் மட்டுமன்றி கிராமங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் கள்ளழகரை தரிசிக்க வந்திருக்கின்றனர். 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.