Home இந்தியா மதுரை ஆதீனம் காலமானார்

மதுரை ஆதீனம் காலமானார்

1541
0
SHARE
Ad

மதுரை :தமிழ்நாட்டின் முக்கியமான, மிகப் பழமையான ஆன்மீக பீடங்களில் ஒன்றான மதுரை ஆதினத்தின் தலைவராகச் செயல்பட்டு வந்த மதுரை ஆதீனம் நேற்று இரவு 9.15 மணியளவில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

அருணகிரிநாதர் என்ற இயற்பெயரைக் கொண்ட அவருக்கு வயது 77. உடல்  நலக் குறைவால் அவர் காலமானார். தமிழகத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வரும் மதுரை ஆதீனத்தின் தலைவராக அவர் பொறுப்பு வகித்த காலத்தில் பல சர்ச்சைக்குரிய அரசியல் கருத்துகளை வெளியிட்டார்.

அதன் மூலம் பல விவாதங்களுக்கு உள்ளானார்.

#TamilSchoolmychoice

சில ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை ஆதீனத்தின் தலைமைப் பொறுப்பை சர்ச்சைக்குரிய நித்தியானந்தா சுவாமிகளிடம் அவர் ஒப்படைத்ததும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. எனினும் பின்னர் அந்தப் பொறுப்பை நித்தியானந்தா சுவாமிகளிடம் இருந்து மீண்டும் ஏற்றுக் கொண்டார்.

மதுரை ஆதீனம் மலேசியாவுக்கும் வருகை தந்து பல்வேறு இடங்களில் உரையாற்றியிருக்கிறார்.

மதுரை ஆதீனத்தின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

“ஆன்மீகப் பணியிலும் மக்கள் பணியிலும் அருந்தொண்டாற்றி அனைவரின் அன்பிற்கும் உரியவராகத் திகழ்ந்த மதுரை ஆதீனம் திரு. அருணகிரிநாதர் அவர்களின் மறைவுச்செய்தி அறிந்து துயருற்றேன். அன்னாரது மறைவால் வாடும் ஆன்மீகப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தனது இரங்கல் செய்தில் ஸ்டாலின் தெரிவித்தார்.