Home Featured நாடு 1எம்டிபி தொடர்பாக அனுமதியின்றி யாரிடமும் கேள்வி கேட்க முடியாது – அமெரிக்க அதிகாரிகளுக்கு காலிட் எச்சரிக்கை!

1எம்டிபி தொடர்பாக அனுமதியின்றி யாரிடமும் கேள்வி கேட்க முடியாது – அமெரிக்க அதிகாரிகளுக்கு காலிட் எச்சரிக்கை!

584
0
SHARE
Ad

Khalid Abu Bakarகோலாலம்பூர் – 1எம்டிபி தொடர்பாக உள்ளூர் அதிகாரிகள், காவல்துறையின் அனுமதியின்றி, மலேசியாவில் எந்த ஒரு நபரிடமும் கேள்வி கேட்க அமெரிக்க சட்டத்துறைக்கு அனுமதியில்லை என்று தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

“நான் முன்பே சொல்லியிருக்கிறேன். மலேசியாவில் யாரிடம் கேள்வி கேட்பதாக இருந்தாலும் அவர்கள் எங்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அது தான் நடைமுறை. 1எம்டிபி விசாரணை தொடர்பாக இங்கு யாரிடமும் விசாரணை நடத்துவதாக இதுவரையில் அவர்களிடமிருந்து எந்த ஒரு தகவலும் இல்லை” என்று மலேசியாகினியிடம் காலிட் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 1எம்டிபி தொடர்பான விசாரணைக்காக அமெரிக்க சட்டத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கோலாலம்பூருக்கு வந்துள்ளதாக சில செய்தி அறிக்கைகள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

 

இதனிடையே, டுவிட்டரில் தன்னைப் பற்றிய அவதூறான கருத்துகளைக் கூறிய ஒருவரைக் கைது செய்ய காலிட் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க சட்டத்துறை விசாரணை தொடர்பில் காலிட் கூறிய கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக டுவிட்டரில் கருத்துத் தெரிவித்திருந்த கோலின்பு என்ற நபர், “அவர் (காலிட்) ஒரு நல்ல போலீஸ்காரர் இல்லை. நஜிப்பையும், 1எம்டிபி-ஐயும் தற்காக்கின்றார்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.