Home Featured கலையுலகம் 5 ஆண்டுகளாக கிஷோருக்கு சம்பளம் பாக்கி வைத்துள்ள பிரகாஷ்ராஜ் – தந்தை புகார்!

5 ஆண்டுகளாக கிஷோருக்கு சம்பளம் பாக்கி வைத்துள்ள பிரகாஷ்ராஜ் – தந்தை புகார்!

663
0
SHARE
Ad

Prakashசென்னை – ‘பயணம்’, ‘தோனி’ ஆகிய படங்களில் படத்தொகுப்பு செய்ததற்காக மறைந்த கிஷோருக்கு, பிரகாஷ்ராஜ் 3 லட்சம் கொடுக்க வேண்டும் என்று என்ற தகவலை கிஷோரின் தந்தை தியாகராஜன் அண்மையில் ஊடகங்களிடம் அம்பலப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, தியாகராஜனை அனுகியுள்ள பிரகாஷ்ராஜ் தரப்பு, 1 லட்சம் தருகின்றோம் என்று தற்போது பேரம் பேசி வருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இது குறித்து கிஷோரின் தந்தை ஊடகங்களிடம் கூறுகையில், “பிரகாஷ்ராஜின் மேலாளர் பாண்டியன் என்பவர், என்னிடம் தொலைபேசியில் பேசினார். ஒரு லட்சம் ரூபாய் தருவதாகவும், பிரகாஷ்ராஜ் நிறுவனத்திற்கு சொந்தமான மடிக்கணினியைத் திரும்ப ஒப்படைக்குமாறு கூறினார்”

#TamilSchoolmychoice

“அந்த மடிக்கணினி எங்களுக்கு எந்த வகையிலும் பயன்படாது. பாக்கித் தொகை முழுவதையும் கொடுத்தால் மடிக்கணினியை ஒப்படைப்பதாக கூறினேன். பணம் தராவிட்டால் பிரகாஷ்ராஜ் மீது நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரகாஷ்ராஜ் தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு பதிலும் வரவில்லை.