Home கலை உலகம் பெங்களூர் தொகுதியில் பிரகாஷ் ராஜூக்கு பின்னடைவு!

பெங்களூர் தொகுதியில் பிரகாஷ் ராஜூக்கு பின்னடைவு!

862
0
SHARE
Ad

பெங்களூர்: தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மத்திய பெங்களூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட பிரகாஷ் ராஜூக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

17-வது மக்களவைத் தொகுதியில் பல முக்கிய வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். அதில் கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரின், மத்திய பெங்களூர் தொகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜ் போட்டியிட்டார்

தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆரம்ப நிலையில் இருந்தே அவர் பின்னடவை சந்தித்து வருகிறார். பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் படுகொலையால் மனமுடைந்த பிரகாஷ் ராஜ், தீவிர அரசியல் ஈடுபடுவதாக அறிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

அதை தொடர்ந்து மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிட்ட பிரகாஷ் ராஜூக்கு வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதனால் மத்திய பெங்களூரு தொகுதியில் பாஜக, காங்கிரஸுடன் பிரகாஷ் ராஜ் என மும்முனை போட்டியாக நிலவியது. தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்த தொகுதியில், பிரகாஷ் ராஜுக்கு ஆரம்பத்திலேயே பின்னடைவு ஏற்பட்டுள்ளது