Home இந்தியா கேரளா நாடாளுமன்றம்: 20 தொகுதிகள் – காங்கிரஸ் கூட்டணி : 19; கம்யூனிஸ்ட் கூட்டணி :...

கேரளா நாடாளுமன்றம்: 20 தொகுதிகள் – காங்கிரஸ் கூட்டணி : 19; கம்யூனிஸ்ட் கூட்டணி : 1

824
0
SHARE
Ad

திருவனந்தபுரம்- இன்று வெளியாகிக் கொண்டிருக்கும் கேரளா மாநிலத்திற்கான நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னணி வகிக்கிறது.

மற்ற மாநிலங்களில் மோசமான தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் காங்கிரசுக்கு கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் மட்டுமே ஆறுதலைத் தந்துள்ளன.

கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மிகப் பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னணி வகிக்கிறார். காங்கிரசின் மற்றொரு தலைவரான சசி தரூர் திருவனந்தபுரம் தொகுதியில் முன்னணி வகிக்கிறார்.

#TamilSchoolmychoice

காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் எனப்படும் புனைடெட் டெமொக்ரெக்டிக் ஃபிரண்ட் (UDF-United Democratic Front) கூட்டணி மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது.

ஆளும் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கூட்டணி (Left-Democratic Front) 1 தொகுதியில் மட்டுமே முன்னணி வகிக்கிறது.

பாஜக கேரளா மாநிலத்தில் கணிசமான வாக்கு வங்கியை இந்த முறை பெற்றிருக்கிறது என்றாலும் இதுவரையில் எந்தத் தொகுதியிலும் அது வெற்றி பெறவில்லை.