Home இந்தியா பிரகாஷ் ராஜ்: விரைவில் புதிய கட்சி தொடக்கம்!

பிரகாஷ் ராஜ்: விரைவில் புதிய கட்சி தொடக்கம்!

795
0
SHARE
Ad

பெங்களூரு: அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜகவையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்த நடிகர் பிரகாஷ் ராஜ் விரைவில் புதிய கட்சி ஒன்றை தொடங்கவுள்ளதாக கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால், இந்த தேர்தலில் அவர் 28, 906 வாக்குகள் மட்டுமே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் செய்தியாளார்களைச் சந்தித்த பிரகாஷ் ராஜ், கடந்த ஆறு மாதங்களாக பெங்களூரு நகரம் முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்து அவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்ததாகவும், போலி தேசபக்தியையும், வெறுப்பையும், ஊட்டிய அரசியல் தலைவர்களை எதிர்த்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். 

“தேர்தல் முடிவில் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்துள்ளனர். அவர்களின் முடிவை நான் மதிக்கிறேன். அதே வேளையில் நான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக தொடர்ந்து போராடுவேன். பெங்களூரு மக்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். அதற்காக விரைவில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளேன்என்று அவர் தெரிவித்தார்.