Home இந்தியா பிரகாஷ் ராஜ் இந்திய மாநிலங்களவை உறுப்பினராகிறார்

பிரகாஷ் ராஜ் இந்திய மாநிலங்களவை உறுப்பினராகிறார்

834
0
SHARE
Ad

ஹைதராபாத் : இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான பிரகாஷ் ராஜ் சமீப காலமாக எந்தக் கட்சியிலும் சேராமல், தொடர்ந்து அரசியல், சமூக விவகாரங்களில் தனது தீவிரக் குரலை பதிவு செய்து வருகிறார்.

தெலுங்குப் படங்களிலும் நிறைய அளவில் நடித்து பெரிய அளவில் தெலுங்குப் பட இரசிகர்களையும் கொண்டிருக்கிறார்.

57 வயதான அவர், தெலுங்கானாவில் இருந்து ராஜ்ய சபா என்னும் இந்திய மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் ஆட்சி நடத்தும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் சார்பில் அவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலியாகும் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 10-இல் நடக்கிறது.

பிரகாஷ் ராஜ், சமீபத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவரும், முதல்வருமான சந்திரசேகர ராவை சந்தித்துப் பேசியிருக்கிறார். இதைத் தொடர்ந்துதான் கன்னடத்துக்காரரான பிரகாஷ் ராஜூக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்க சந்திரசேகர ராவ் முடிவு செய்திருக்கிறார் என ஊடகங்கள் தெரிவித்தன.