Home கலை உலகம் ஆஸ்ட்ரோ வானொலி : 16.4 மில்லியன் வாராந்திர நேயர்களைப் பதிவிட்டது

ஆஸ்ட்ரோ வானொலி : 16.4 மில்லியன் வாராந்திர நேயர்களைப் பதிவிட்டது

763
0
SHARE
Ad

ஆஸ்ட்ரோவின் ஊடக அறிக்கை

  • 3% அடைவுநிலையை அதிகரித்து 16.4 மில்லியன் வாராந்திர நேயர்களை ஆஸ்ட்ரோ வானொலி பதிவிட்டது.• சந்தைப் பங்கு 3% அதிகரித்து 16.4 மில்லியன் வாராந்திர நேயர்களை அல்லது 21.3 மில்லியன் வானொலி நேயர்களில் 77.1% பங்கைப் பதிவிட்டது.• ERA & SINAR மலேசியாவில் முதல் மற்றும் இராண்டாம் நிலை வானொலிகள்.• ERA, MY, ராகா, Hitz.fm அனைத்து மொழிகளிலும் முதல் நிலை வானொலி தரங்கள்.

தீபகற்ப மலேசியாவில் 96% தனிநபர்களை மலேசிய வானொலி சென்றடைந்ததால் ஒரு புதிய உயர்வை மலேசிய வானொலி அடைந்துள்ளதை 2022 ஜி.எஃப்.கே வானொலி நேயர்களின் அளவீட்டு ஆய்வின் (GfK Radio Audience Measurement Survey, RAM) முதலாம் அலைக் கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.

இது முறையே 21.3 மில்லியன் வாராந்திர வானொலி நேயர்களுக்குச் சமம். முந்தைய ஆய்வைக் காட்டிலும் வாராந்திர வானொலி நேயர்களின் எண்ணிக்கை 217,000 என்ற எண்ணிக்கையிலான அற்புதமான அதிகரிப்பைக் குறிக்கிறது. ஆஸ்ட்ரோ வானொலி அதன் சந்தைப் பங்கை 3% அதிகரித்து முறையே 16.4 மில்லியன் வாராந்திர நேயர்கள் அல்லது 21.3 மில்லியன் வானொலி நேயர்களில் 77.1%-ஐ கைப்பற்றி மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான நேயர்களைக் கொண்ட வானொலி இயக்குனராக அதன் தலைமைத்துவத்தை வலுப்படுத்தியுள்ளது.

16.6 மில்லியன் மாதாந்திர சராசரி மின்னியல் வானொலி பதிவிறக்கங்கள் (ஸ்ட்ரீம்கள்), 25.7 மில்லியன் சமூக ஊடகங்களைப் பின்தொடர்பவர்கள், 359.6 மில்லியன் காணொளி இரசிகர்கள், மற்றும் 146.1 மில்லியன் மாதாந்திர சராசரி முகநூலின் அடைவுநிலை (reach) ஆகியவற்றின் வழி வானொலி நேயர்கள் எண்ணிக்கையின் அடைவுநிலையில் ஆஸ்ட்ரோ வானொலி உயர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

ஆஸ்ட்ரோ வானொலியின் அனைத்து தரங்களும் அனைத்து மொழிகளிலும் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளனர்: ராகா, முதல் தர தமிழ் வானொலி; ERA, முதல் தர மலாய் வானொலி; HITZ, முதல் தர ஆங்கில வானொலி மற்றும் MY, முதல் தர சீன வானொலி. 71.9% மலாய் நேயர்கள், 87.6% ஆங்கில நேயர்கள், 71.1% சீன நேயர்கள் மற்றும் 93.6% தமிழ் நேயர்கள் என தனது அடைவுநிலையை ஆஸ்ட்ரோ வானொலி வலுப்படுத்தியுள்ளது.

• ராகா, மலேசியாவின் முதல் தர தமிழ் வானொலி தன் வாராந்திர நேயர்களின் எண்ணிக்கையை 1.8 மில்லியனாக உயர்த்தியுள்ளது. காலை அங்கத்தின் நேயர்களின் எண்ணிக்கை 1.1 மில்லியன் அதிகரித்ததிலும் இயக்க அங்கத்தின் (Drive segment) நேயர்களின் எண்ணிக்கை 260,000 அதிகரித்து முறையே 1.2 மில்லியன் நேயர்களின் எண்ணிக்கையைப் பதிவிட்டதிலும் இவ்வுயர்வுப் பிரதிப்பலித்துள்ளது. ராகாவின் பிரத்தியேக நேயர்களின் எண்ணிக்கை 131,000 அதிகரித்து முறையே 753,000 பதிவிடப்பட்டுள்ளது.

• ERA, மலேசியாவின் முதல் தர மலாய் வானொலி தன் வாராந்திர நேயர்களின் எண்ணிக்கையை 5.8 மில்லியனாக உயர்த்தியுள்ளது. 10 முதல் 29 வயதிற்க்குட்ப்பட்ட இளம் மலாய் நேயர்களுக்கு மத்தியில், 2.9 மில்லியன் நேயர்களின் எண்ணிக்கையைப் பதிவிட்டு வானொலியின் மத்தியில் மலேசியாவின் மிக உயர்ந்த வாராந்திர அடைவுநிலையைத் தொடர்ந்து அடைந்தது. காலை அங்கம் 3.1 மில்லியன் நேயர்களின் அதிகரிப்புடன் முதல் நிலையையும், இயக்க அங்கம் (Drive segment) 2.7 மில்லியன் நேயர்களுடன் உயர்ந்த நிலையையும் தக்க வைத்துக் கொண்டன. 866,000 உடன் அனைத்து வானொலி தரங்களுக்கு மத்தியில் மிக உயர்ந்தப் பிரத்தியேக நேயர்களை ERA அடைந்தது.

• 5.2 மில்லியன் வாராந்திர நேயர்களின் எண்ணிக்கை அதிகரிப்புடன் மலேசியாவில் அதிகம் கேட்க்கப்படும் இரண்டாம் வானொலியாகவும், மலேசியாவின் இரண்டாம் தர மலாய் வானொலியாகவும் SINAR தன் நிலையைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது. SINAR-இன் காலை அங்கம் மற்றும் இயக்க அங்கம் (Drive segment, 3pm – 7pm) முறையே 2.6 மில்லியன் மற்றும் 2.6 மில்லியன் வாராந்திர நேயர்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பைப் பதிவிட்டுள்ளது. 679,000 பிரத்தியேக நேயர்களை SINAR அடைந்தது.

• கிழக்கு கடற்கரை வட்டாரங்களில் முதல் தர வானொலியான GEGAR அதன் வாராந்திர நேயர்களின் என்ணிக்கையை 2.6 மில்லியன் உயர்த்தியுள்ளது. கிளந்தனிலிருந்து 35% நேயர்களையும், பகாங்கிலிருந்து 22% நேயர்களையும், திரங்கானுவிலிருந்து 26% நேயர்களையும் மேற்கு கடற்கரையிலிருந்து 16% நேயர்களையும் GEGAR ஈர்த்துள்ளது.

• ZAYAN, 340,000 வாராந்திர நேயர்களின் எண்ணிக்கையைப் பதிவுச்செய்தது, இயக்க அங்க (Drive segment) நேயர்களின் எண்ணிக்கை 185,000 அதிகரித்தது, அதே நேரத்தில், காலை அங்க நேயர்களின் எண்ணிக்கை 153,000 பதிவிட்டது.

• 2.6 மில்லியன் வாராந்திர நேயர்களின் எண்ணிக்கையைக் கொண்ட HITZ, 257,000 நேயர்களைப் பதிவிட்டு ஆங்கில வானொலி தரங்களுக்கு மத்தியில் அதிகப் ‘பிரத்யேக நேயர்களின்’ என்ணிக்கையை அடைந்துள்ளது. 1.2 மில்லியன் நேயர்களுடன் ஆங்கிலத் தரங்களுக்கானக் காலை அங்கத்தின் அதிகபட்ச நேயர்களைக் கொண்ட வானொலியாகவும், 1.3 மில்லியன் நேயர்களுடன் ஆங்கிலத் தரங்களுக்கான இயக்க அங்கத்தின் (Drive segment) அதிகபட்ச நேயர்களைக் கொண்ட வானொலியாகவும் HITZ பதிவிட்டது. 5 மணிநேரம் 24 நிமிடங்களைக் கேட்க்கும் நேரத்தின் அதிகரிப்பையும் HITZ பதிவுச் செய்துள்ளது.

• MIX, 1.2 மில்லியன் வாராந்திர நேயர்களின் எண்ணிக்கையைப் பதிவுச்செய்தது. காலை அங்க நேயர்களின் எண்ணிக்கை 542,000 அதிகரித்தது. அதே நேரத்தில், 489,000 இயக்க அங்க (Drive segment) நேயர்களின் எண்ணிக்கையைப் பதிவிட்டது. 108,000 உடன் 71% பிரத்தியேக நேயர்களின் உயர்வை MIX அடைந்தது.

• LITE, 771,000 வாராந்திர நேயர்களின் எண்ணிக்கையைப் பதிவுச்செய்தது, காலை அங்கம் மற்றும் இயக்க அங்கம் (Drive segment) முறையே 368,000 மற்றும் 374,000 நேயர்களின் எண்ணிக்கையைப் பதிவிட்டது.

• MY-இன் வாராந்திர நேயர்களின் எண்ணிக்கை 300,000 அதிகரித்து முறையே 2.8 மில்லியன் பதிவிட்டது. காலை அங்கம் மற்றும் இயக்க அங்கம் (Drive segment) முறையே 1.8 மில்லியன் மற்றும் 1.6 மில்லியன் நேயர்களின் எண்ணிக்கையைப் பதிவிட்டுச் சீன வானொலித் தரங்களுக்கு மத்தியில் அவ்விரு அங்கங்களும் அதிக எண்ணிக்கையிலான நேயர்களை அடைந்துள்ளன.

• 512,000 மற்றும் 540,000 காலை அங்கம் மற்றும் இயக்க அங்க (Drive segment) நேயர்களின் எண்ணிக்கையுடன் MELODY 1.0 மில்லியன் வாராந்திர நேயர்களை ஈர்த்தது. 6 மணிநேரம் 40 நிமிடங்களைக் கேட்க்கும் நேரத்தின் அதிகரிப்பையும் 226,000 பிரத்தியேக நேயர்களின் எண்ணிக்கையும் MELODY பதிவுச் செய்துள்ளது.

• 94,000 மற்றும் 108,000 காலை அங்கம் மற்றும் இயக்க அங்க (Drive segment) நேயர்களின் எண்ணிக்கையுடன் GOXUAN 200,000 வாராந்திர நேயர்களைப் பதிவுச் செய்துள்ளது.

இந்த ஆய்வு வானொலி கேட்கும் பழக்கத்தை அறிய 6 வாரங்களுக்கும் மேலாகப் பாரம்பரிய வானொலி டைரிகள் (75%) மற்றும் மின்-டைரிகள் (25%) ஆகியவற்றின் கலவையுடன் தீபகற்ப மலேசியா முழுவதும் 6,000 தனித்துவமான நபர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. 21 வானொலி தரங்கள் இவ்வலையின் சந்தாதாரர்கள் ஆவர்.

ஆஸ்ட்ரோ வானொலி தரங்கள் முதல் 10 சிறந்தப் பிராண்டுகளின் தரவரிசையில் 6 இடங்களைக் கைப்பற்றின.

தகவல்கள் மூலம்:

  • ஜி.எஃப்.கே வானொலி நேயர்களின் அளவீட்டு ஆய்வு (GfK Radio Audience Measurement, RAM), 2022 முதலாம் அலை | முகநூல் பக்க அடைவுநிலை: முகநூல் வணிக மேலாளர் (ஜனவரி-மார்ச் 2022) |மின்னியல் பதிவிறக்கங்கள்: ரேடியோ அக்திவ் (ஜனவரி-மார்ச் 2022) |அகப்பக்கத்தின் தனித்துவமான வருகையாளர்கள் / அகப்பக்கத்தின் பார்வையாளர்கள்: Google Analytics (ஜனவரி-மார்ச் 2022) |காணொலிப் பார்வையாளர்கள்: முகநூல் Creator Studio, CrowdTangle, யூடியூப் (மார்ச் 2022) | மொத்த சமூக ஊடகப் பின்தொடர்பவர்கள்: முகநூல், இன்ஸ்டாகிராம், கீச்சகம், யூடியூப், டிக்டாக் (மார்ச் 2022)