Home கலை உலகம் ராகா-மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ‘குறுங்கதைப் போட்டி’ வெற்றியாளர்கள்

ராகா-மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ‘குறுங்கதைப் போட்டி’ வெற்றியாளர்கள்

775
0
SHARE
Ad

  • ‘குறுங்கதைப் போட்டியின்’ வெற்றியாளர்களை ராகா அறிவித்தது. 
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட போட்டி.

ராகா ‘குறுங்கதைப் போட்டியின்’ வெற்றியாளர்கள்:

• ஜனவரி 28 முதல் பிப்ரவரி 28, 2022 வரை ஆர்வமுள்ள உள்ளூர் எழுத்தாளர்களுக்காக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டக் ‘குறுங்கதைப் போட்டியின்’ வெற்றியாளர்களை ராகா அறிவித்தது:

#TamilSchoolmychoice

o முதல் நிலை வெற்றியாளர்: ஆனந்த ஜோதி த/பெ சேகன்

o இரண்டாம் நிலை வெற்றியாளர்: தனுஷா த/பெ இள முருகன்

o மூன்றாம் நிலை வெற்றியாளர்: நாதன் தேவா

• 6200 ரிங்கிட் மொத்த ரொக்கப் பரிசுத் தொகையில் தங்களின் பங்கை வெற்றியாளர்கள் வீட்டிற்குத் தட்டிச் சென்றனர்: முதல் பரிசு 2000 ரிங்கிட், இரண்டாம் பரிசு 1000 ரிங்கிட், மற்றும் மூன்றாம் பரிசு 500 ரிங்கிட். தேர்ந்தெடுக்கப்பட்ட இருபத்தேழு (27) போட்டியாளர்களுக்குத் தலா 100 ரிங்கிட் மதிப்புள்ள ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

• மே 27 முதல், ராகாவின் ‘கதைக் கேளு’ அங்கத்தில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், மதியம் 2 மணி முதல் 3 மணி வரை, இடம்பெறும் வெற்றியாளர்களின் கதைகளை இரசிகர்கள் கேட்டு மகிழலாம்.

• மேல் விபரங்களுக்கு, ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்