Home இந்தியா நடிகர் பிரகாஷ் ராஜ் காங்கிரஸ் சார்பில் பெங்களூருவில் போட்டி

நடிகர் பிரகாஷ் ராஜ் காங்கிரஸ் சார்பில் பெங்களூருவில் போட்டி

969
0
SHARE
Ad

பெங்களூரு – இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையிலும், தேர்தல் பரபரப்பு இந்தியாவின்  அனைத்து மாநிலங்களிலும் தீயாகப் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவேன் என நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவித்திருந்த நிலையில், இன்று புதன்கிழமை வெளியான தகவல்களின்படி அவருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவுக் கரம் நீட்டுவதாகவும், மத்திய பெங்களூரு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டு, பிரகாஷ் ராஜூவுக்கு ஆதரவு அளிக்கும் எனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் திடீர் திருப்பத்தைத் தொடர்ந்து மத்திய பெங்களூரு தொகுதியில் பிரகாஷ் ராஜின் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பெங்களூரு தொகுதியில் தமிழர்களும் அதிகமாக வசிப்பதால், தமிழ்ப் படங்களில் அதிகமாக நடித்துப் பிரபலமாகியுள்ள பிரகாஷ் ராஜூவுக்கு தமிழர்களின் வாக்குகளும் அதிக அளவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice