Home கலை உலகம் பிரகாஷ் ராஜ் மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டி

பிரகாஷ் ராஜ் மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டி

970
0
SHARE
Ad

சென்னை – எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுவேன் என அண்மையில் அறிவித்திருந்த நடிகர் பிரகாஷ் ராஜ், தான் போட்டியிடப் போகும் தொகுதியைப் பின்னர் அறிவிக்கப் போவதாகத் தெரிவித்திருந்தார்.

அவர் தனது சொந்த மாநிலமான கர்நாடகாவில் போட்டியிடுவாரா அல்லது தமிழகத்தில் போட்டியிடுவாரா என்ற ஆரூடங்கள் நிலவி வந்த நிலையில், மத்திய பெங்களூரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவேன் என அவர் அறிவித்திருக்கிறார்.

முக்கிய இந்திய மொழிகளில் வில்லன், குணசித்திரம் என பல வேடங்களில் சொந்தக் குரலிலேயே நடித்து அசத்தி வரும் பிரகாஷ் ராஜ். அண்மையக் காலத்தில் அடிக்கடி அரசியல், சமூகத் தளங்களில் பரபரப்பான முறையில், துணிச்சலுடன் தனது கருத்துகளை வெளியிட்டு வந்தவர்.

#TamilSchoolmychoice

அதிலும் குறிப்பாக பிரதமர் மோடிக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் துணிச்சலாக அவர் வெளியிட்ட கருத்துகள், ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டன.

மத்திய பெங்களூரு நாடாளுமன்றத் தொகுதி அதிகமான தமிழ் வாக்காளர்களைக் கொண்டிருக்கும் பகுதி என்பதால் அந்தத் தொகுதியை பிரகாஷ் ராஜ் தேர்ந்தெடுத்திருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.