Home Featured தொழில் நுட்பம் 40-ம் ஆண்டை எட்டியது ஆப்பிள்! பீட்ஸ் 1 இசையுடன் ஊழியர்கள் கொண்டாட்டம்!

40-ம் ஆண்டை எட்டியது ஆப்பிள்! பீட்ஸ் 1 இசையுடன் ஊழியர்கள் கொண்டாட்டம்!

744
0
SHARE
Ad

Appleகலிபோர்னியா – ஆப்பிள் நிறுவனம் வெற்றிகரமாக 40-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை மாலை பணிகள் முடிந்தவுடன் (மலேசிய நேரப்படி இன்று காலை) கலிபோர்னியாவின் குப்பர்டினோ வளாகத்தில் பாரம்பரிய பீர் மற்றும் பீட்ஸ் 1 இசையுடன் கூடிய வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.

Apple 1இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் கும், ஆப்பிளின் தற்போதைய பணியாளர்களுக்கு வாழ்த்துகள் கூறி உற்சாகப்படுத்திய அதே வேளையில், நிறுவனத்தின் முந்தைய பணியாளர்களுக்கும் தனது மரியாதையையும் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, சற்று முன்னர் டிம் குக் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், “இனிய பிறந்தநாள், ஆப்பிள்! 40-ம் ஆண்டைக் கொண்டாடுகின்றோம். புதிய கண்டுபிடிப்புகளில் இன்னும் பல ஆண்டுகளை எதிர்நோக்குகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

Apple 3முன்னதாக, குப்பர்டினோ தலைமையகத்தில், ஆப்பிளின் இணை நிறுவனர் அமரர் ஸ்டீவ் ஜாப்ஸ் தலைமையிலான முதல் தலைமுறை மேக் குழுவினருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொடிகள் பறக்கவிடப்பட்டன.

படங்கள்: டிம் குக் டுவிட்டர்