Home One Line P2 முகேஷ் அம்பானி நிறுவனத்தில் 10 விழுக்காடு பங்குகளை வாங்கும் பேஸ்புக்

முகேஷ் அம்பானி நிறுவனத்தில் 10 விழுக்காடு பங்குகளை வாங்கும் பேஸ்புக்

856
0
SHARE
Ad

மும்பை – இந்தியாவில் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 10 விழுக்காடு பங்குகளை வாங்குவதற்கு பேஸ்புக் நிறுவனம் முன்வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் 8 விழுக்காடு வரையில் விலையேற்றம் கண்டன.

ரிலையன்ஸ் பங்குகளின் கொள்முதலைத் தொடர்ந்து தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் சிறுபான்மை பங்குதாரர்களில் மிகப் பெரிய பங்குடமையாளராக பேஸ்புக் திகழ்கிறது.

#TamilSchoolmychoice

இந்த இரண்டு மாபெரும் நிறுவனங்களின் பங்குக் கொள்முதல் ஒப்பந்தமானது இந்தியாவை மின்னிலக்கத் (டிஜிடல்) துறையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறச் செய்யும் வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது என முகேஷ் அம்பானி இன்று வெளியிட்ட காணொளி வழியான செய்தியில் தெரிவித்தார்.