Home One Line P2 கொவிட்-19 எதிரான போராட்டத்திற்கு 13 மில்லியன் ரூபாய்கள் வழங்கிய நடிகர் விஜய்

கொவிட்-19 எதிரான போராட்டத்திற்கு 13 மில்லியன் ரூபாய்கள் வழங்கிய நடிகர் விஜய்

599
0
SHARE
Ad

சென்னை – இந்தியாவில் கொவிட்-19 தொற்றுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டத்திற்குக் கைகொடுக்கும் வண்ணம் நடிகர் விஜய் 13 மில்லியன் ரூபாய்கள் நன்கொடையாக வழங்குகிறார்.

கொவிட்-19 நோக்கத்திற்காக இயங்கி வரும் பல்வேறு அற நிதிகளுக்கு இந்தத் தொகையை அவர் பிரித்துக் கொடுத்துள்ளார்.

பிரதமரின் கொவிட்-19 நிதிக்கு 25 இலட்சம் ரூபாய் வழங்கியிருக்கும் விஜய், தமிழக முதல்வரின் இதே நோக்கத்திற்கான நிதிக்கு 50 இலட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

தனது திரைப்படங்களுக்கு தென் மாநிலங்கள் முழுவதிலும் இரசிகர்களிடையே பெரும் ஆதரவு இருப்பதால் மற்ற மாநிலங்களுக்கும் கொவிட்-19 நிதியை விஜய் வழங்கியிருக்கிறார்.

கேரளா முதல்வரின் கொவிட்-19 நிதிக்காக 10 இலட்சம் ரூபாய் வழங்கியிருக்கும் விஜய் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநில முதல்வர்களின் கொவிட்-19 நிதிக்கு தலா 5 இலட்சம் ரூபாய் நிதி உதவியை வழங்கியிருக்கிறார்.

இது தவிர பெப்சி எனப்படும் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்களின் கூட்டமைப்புக்கு 25 இலட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியிருக்கிறார். கொவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாடுகளால் வருமானம் இழந்து தவிக்கும் திரைப்படத் தொழிலாளர்களின் நலன்களுக்காக இந்த நிதி வழங்கப்பட்டிருக்கிறது.