பேச்சு சுதந்திரம் பற்றி பேசுவோர், ராம்தேவ் பேச்சையும் சுதந்திரமாகத்தானே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டு சட்டத்திற்கு அஞ்சுவதாகவும் அல்லது, பாரத் மாதா வாழ்க என்று கூறாதவர்கள் தலைகளை லட்சக்கணக்காக இருந்தாலும் வெட்டி விடுவேன் என்றும் பாபா ராம்தேவ் கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இதுகுறித்து, அமித்ஷாவிடம் நிருபர் கேட்டபோது, பாபா ராம்தேவ், பாஜக உறுப்பினர் கிடையாது. மேலும், இந்த நாட்டில் பேச்சு சுதந்திரம் பற்றி பேசுவோர். ராம்தேவுக்கு மட்டும் எப்படி மறுக்கிறார்கள் என்பது புரியவில்லை என்று தெரிவித்தார்.