Home Featured நாடு ரபிசி கைது செய்யப்பட்ட இடம் நாடாளுமன்ற எல்லைக்குட்பட்டதா? – பண்டிகார் விசாரணை!

ரபிசி கைது செய்யப்பட்ட இடம் நாடாளுமன்ற எல்லைக்குட்பட்டதா? – பண்டிகார் விசாரணை!

678
0
SHARE
Ad

Tan_Sri_Pandikar_Amin_Mulia34கோலாலம்பூர் – நாடாளுமன்ற நுழைவு வாயிலில் வைத்து பிகேஆர் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லியை காவல்துறை கைது செய்த விவகாரத்தில், தேசிய காவல்படைத் தலைவர் காலிட் அபு பக்கர், நாடாளுமன்றக் கட்டுப்பாட்டை மீறினாரா என்பதை உறுதியாகச் சொல்லமுடியவில்லை என்கிறார் சபாநாயகர் பண்கார் அமின் மூலியா.

காரணம் ரபிசி கைது செய்யப்பட்ட இடம் நாடாளுமன்ற நுழைவு வாயிலுக்கு வெளியே என்பதால், அந்த இடம் நாடாளுமன்ற வளாகத்தைச் சேர்ந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று பண்டிகார் தெரிவித்துள்ளார்.

அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்தாலோசித்துவிட்டு அதில் முடிவெடுப்பதாகவும் பண்டிகார் உறுதியளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

காலிட் அபு பக்கர் நாடாளுமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி சுங்கை பட்டாணி பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோஹாரி அப்துலுக்குப் பதிலளிக்கும் வகையில் பண்டிகார் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.