Home Featured கலையுலகம் கபாலி ரஜினியின் பின்னணி குரல் சேர்ப்பு நிறைவு! மே 1இல் முன்னோட்டம் வெளியீடு!

கபாலி ரஜினியின் பின்னணி குரல் சேர்ப்பு நிறைவு! மே 1இல் முன்னோட்டம் வெளியீடு!

627
0
SHARE
Ad

சென்னை – ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கபாலி படத்தின் பணிகள் நிறைவை நெருங்கி வருகின்றன. படத்தின் கதாநாயகன் ரஜினியின் பின்னணிக் குரல் சேர்ப்பு (டப்பிங்) கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவடைந்ததாக தமிழகத் தகவல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

kabali051115_3கடந்த வாரம் முழுவதும் படத்துக்கான பின்னணி ஒலி சேர்ப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்றன என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதைத் தொடர்ந்து, தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதி கபாலி படத்தின் முன்னோட்டம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நிமிட நேரம் மட்டுமே இந்த முன்னோட்டம் இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

ரஜினியின் 161வது படமான கபாலி, பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளிவருகின்றது. இதன் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளன.

தமிழகத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர்தான் கபாலி படமும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.