Home Featured இந்தியா சுஷ்மா சுவராஜிற்கு நிமோனியா காய்ச்சல்; அவர் நலமாக உள்ளார் – மருத்துவர்கள் தகவல்!

சுஷ்மா சுவராஜிற்கு நிமோனியா காய்ச்சல்; அவர் நலமாக உள்ளார் – மருத்துவர்கள் தகவல்!

556
0
SHARE
Ad

Sushma Swarajபுதுடெல்லி – நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு (64) நேற்று முன்தினம் மாலை திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், நெஞ்சுவலியுடன் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அவர் எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அதன்பின் நேற்று முன்தினம் இரவு அவர் இதய சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். சுஷ்மாவின் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அமைச்சர் சுஷ்மாவுக்கு நிமோனியா அறிகுறிகள் இருப்பதுபோல் தெரிகிறது. அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை நன்றாக உள்ளது’’ என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice