Home Uncategorized இந்தியா: காலணி, கழிப்பறை, தரை விரிப்பில் இந்து கடவுள்களின் படங்கள், மக்கள் எதிர்ப்பு!

இந்தியா: காலணி, கழிப்பறை, தரை விரிப்பில் இந்து கடவுள்களின் படங்கள், மக்கள் எதிர்ப்பு!

1064
0
SHARE
Ad

புது டில்லி: அமேசான் வணிக இணையத்தளத்தில், இந்து கடவுள்களின் படங்கள் காலணிகள், கழிப்பறைகள் மற்றும் தரை விரிப்புகளில் இடம்பெற்றுள்ளதைத் தொடர்ந்து டுவிட்டர் பக்கத்தில் அதிகபடியான எதிர்ப்புகள் அமேசான் இணையத்தளத்திற்கு எழுந்துள்ளன.

ஆயிரத்திற்கும் மேலான பயனர்கள் அமேசான் தளத்தை புறக்கணிக்ககோரி சமூகத்தளத்தில் #BoycottAmazon எனும் ஹேஷ்டேக்கை பிரபலமாக்கி வருகிறார்கள்.

நேற்று வியாழக்கிழமை தொடங்கி இந்தியாவில் உள்ள பெரும்பாலான டுவிட்டர் பயனர்கள் இது குறித்து பதிவிட்டு வருகின்றனர். மேலும், இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இது தொடர்பாக அந்நிறுவனத்தின் மீது தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.