Home இந்தியா கமல்ஹாசனுக்கு எதிர்ப்புகள் அதிகரிப்பு, பிரச்சாரக் கூட்டத்தில் முட்டை, கல்வீச்சு!

கமல்ஹாசனுக்கு எதிர்ப்புகள் அதிகரிப்பு, பிரச்சாரக் கூட்டத்தில் முட்டை, கல்வீச்சு!

795
0
SHARE
Ad

சென்னை: அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு கடந்த 11-ஆம் தேதி அத்தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியப் பிறகு அவருக்கு எதிராக எதிர்ப்புகள் மக்களிடத்திலிருந்தும், அரசியல் தலைவர்களிடத்திலிருந்தும் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் நேற்று வியாழக்கிழமை அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட வேலாயுதம் பாளையத்தில் மிகுந்த காவல் அதிகாரிகளின் பாதுகாப்புக்கு இடையே பிரசாரம் செய்தார். பிரசாரத்தை முடித்துக் கொண்டு கமல்ஹாசன் பிரசார மேடையில் இருந்து கீழே இறங்கும் போது அவரை நோக்கி முட்டை, கற்கள் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கற்களை வீசிய இருவரை மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.