Home நாடு சீனர், இந்தியர்களிடத்திலும் இனவாதம் உண்டு!- அன்வார் இப்ராகிம்

சீனர், இந்தியர்களிடத்திலும் இனவாதம் உண்டு!- அன்வார் இப்ராகிம்

951
0
SHARE
Ad

பாங்கி: இனவாதம் புதிய வாசலொன்றை திறந்து வைத்துள்ளது என பிகேஆர் கட்சி தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். இம்மாதிரியான விவகாரம் என்றால் அது மலாய்க்காரர்களை மட்டும் குறித்து பேசுவது சரியாக இருக்காது என அவர் குறிப்பிட்டார். இந்தியர்கள் மற்றும் சீனர்கள் மத்தியிலும் இந்த எண்ணம் வேறுன்றி இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

ஒரு சில நேரங்களில் சீனர் மற்றும் இந்தியர்களின் கருத்துகள், செயல்பாடுகள் எல்லை மீறி மூர்க்கத்தனமாக போகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களுக்கு (இந்தியர்கள்) மட்டும்தான் வறுமை பிரச்சினை இருப்பதாக கருதுகின்றனர். அதில் உண்மையில்லைஎன்று அன்வார் கூறினார். 

#TamilSchoolmychoice

வணிகம் என்றால்,அது சீனர்களை முக்கியத்துவப்படுத்துகிறது, மலாய்க்காரர்கள் ஒதுக்கப்படுகிறார்கள்” என்று அவர் கூறினார். எல்லா விவகாரங்களிலும் எல்லா இனங்களையும் உள்ளடக்கிய செயல்முறை மட்டுமே நாட்டை வளப்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.