பிரசிலியா: வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பிரேசிலில் உள்ள அமேசான மழைக் காடுகள் இவ்வாண்டு பல முறை தீயில் எரிந்துள்ளதாக பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம் (ஐஎன்பிஇ) எச்சரித்துள்ளது. மேலும் இது பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்கு பேரழிவு தரக்கூடியதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இந்த ஆண்டு பிரேசிலில் 72,843 தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன என்றும், அமேசான் பகுதியில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பட்டுள்ளதாக ஐஎன்பிஇ தெரிவித்துள்ளது. 2018-ஆம் ஆண்டு தரவுகளோடு ஒப்பிடுக்கையில் இவ்வாண்டு மழைக் காடுகள் எரியும் நிகழ்வானது 83 விடுக்காடு அளவுக்கு அதிகரித்துள்ளதாகக் கூறுப்படுகிறது.
பிரேசிலில் காடுகள் அழிக்கப்படுவது தொடர்பாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியானதை அடுத்து அண்மையில் அந்நாட்டு அதிபர் சயீர் பொல்சனாரூ பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை தலைவரை பணிநீக்கம் செய்தார். மேலும், அந்தப் புகைப்படங்களை பொய்யானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமேசான் பெரும்பாலும் பூமியின் நுரையீரல் என்று குறிப்பிடப்படுகிறது. இது பூமியின் வளிமண்டலத்தில் 20 விழுக்காடு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது. புவி வெப்பமடைதலைக் குறைப்பதில் இது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது, மேலும் இது கணக்கிட முடியாத விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் தாயகமாகும்.
இதே போன்ற சூழ்நிலைகள் தொடர்ந்தால் மனித இனம் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலைக்குத் தள்ளப்படும் என்று எச்சரித்துள்ளனர்.