புத்ராஜெயா: மலேசியா டாக்டர் ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பாது என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய பேச்சாளரான ஜாகிரை வெளியேற்ற வேண்டும் என்று விரும்பிய பலரின் அழுத்தத்தை அரசாங்கம் எதிர்கொண்ட போதும் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மலேசிய இந்துக்களின் விசுவாசத்தை ஜாகிர் நாயக் கேள்விக்குட்படுத்தியதும், சீன சமூகத்தினரை நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கூறியப் பிறகும் அவர் மீதான அரசாங்கத்தின் நிலைப்பாடு மாறாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த நேரத்தில் எங்கள் நிலைப்பாடு மாறவில்லை” என்று அவர் இன்று வியாழக்கிழமை பிற்பகல் புத்ராஜெயாவில் தெரிவித்தார்.