Home நாடு சாகிர் நாயக் விவகாரம் – “இப்போதைக்கு அப்படியே விட்டு விடுவோம்” – அன்வார் இப்ராகிம்

சாகிர் நாயக் விவகாரம் – “இப்போதைக்கு அப்படியே விட்டு விடுவோம்” – அன்வார் இப்ராகிம்

267
0
SHARE
Ad
சாகிர் நாயக்

புத்ரா ஜெயா : பிரதமர் அன்வார் இப்ராகிம் அண்மையில் மேற்கொண்ட இந்தியப் பயணத்தின்போது, பத்திரிகையாளர்களைச் சந்தித்த போதெல்லாம், அவரிடம் சர்ச்சைக்குரிய மதபோதகரான சாகிர் நாயக் தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

“சாகிர் நாயக்கை நாடு கடத்தும் பிரச்சினையை சிறிது காலம் விட்டுவிடுவது சிறந்தது. சாகிர், வெளிநாடுகளுக்கு சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அவ்வப்போது மலேசியாவிற்குத் திரும்புகிறார், அவர் நாட்டில் எந்தவித சர்ச்சைகளையும் எழுப்பவில்லை. இந்தியா அல்லது மலேசியா குறித்து எந்தவிதமான கருத்துகளையும் வெளியிடவில்லை. இந்தியாவில் சிலரால் வெளியிடப்பட்ட அக்கறையை நாங்கள் உணர்கிறோம், ஆனால் சாகிர் நாயக் விவகாரம், மலேசியா-இந்தியா உறவுகளை பாதிக்காதவரை- நாட்டின் பாதுகாப்பில் பிரச்சினைகளை உருவாக்காதவரை – இப்போதைக்கு இந்த விஷயத்தை விட்டுவிடலாம் என நினைக்கிறேன்,” என்று அன்வார் இந்தியா டுடே குளோபல் ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் கூறினார்.

ஊடகத் தகவலின்படி, சாகிர் 2016 முதல் இந்திய அதிகாரிகளால் பணமோசடி மற்றும் வெறுப்புரை மூலம் தீவிரவாதத்தை தூண்டியதற்காக தேடப்படுகிறார்.

#TamilSchoolmychoice

இந்த சர்ச்சையான மதபோதகரை நாடு கடத்துவதற்கு இந்தியா மலேசியாவை நாடினால், அதற்கு மேலும் ஆதாரங்களை இந்தியா வழங்கினால், மலேசியா அந்த வேண்டுகோளைப் பரிசீலிக்கலாம் என அன்வார் கூறினார்.

“நிச்சயமாக, நாங்கள் சட்டத்தை மதிக்க வேண்டும். எந்த விதமான தவறுகளையும் அனுமதிக்க மாட்டோம்,” என்றார் அன்வார்.