Home Featured உலகம் நான் அதிபரானால் 50% பெண்கள் அமைச்சர்கள் – ஹிலாரி கிளிண்டன்!

நான் அதிபரானால் 50% பெண்கள் அமைச்சர்கள் – ஹிலாரி கிளிண்டன்!

523
0
SHARE
Ad

hilary-clintonவாஷிங்டன் – அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி தரப்பில் டொனால்டு டிரம்பும் முன்னணியில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று அங்கு மேரிலாந்து, பென்சில்வேனியா, டெலாவர், கனெக்டிகட், ரோட் தீவு ஆகிய 5 மாகாணங்களில் அதிபர் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியில் தேர்தல் நடந்தது.

முன்னதாக இந்த தேர்தலுக்காக ஹிலாரி கிளிண்டன், டவுன்ஹால் பிரச்சார கூட்டம் ஒன்றில் நேற்று முன்தினம் பேசினார். அப்போது அவர், “நான் அதிபர் பதவிக்கு வந்தால் எனது அமைச்சரவை அமெரிக்கா போல இருக்கும்.

#TamilSchoolmychoice

அமெரிக்காவில் 50 சதவீதம் பேர் பெண்கள் அல்லவா? நான் சொல்வது சரிதானே?” நாடாளுமன்றத்தில் 50 சதவிகித பெண்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். இதன்மூலம் தனது அமைச்சர்சபையில் 50 சதவீதம் பேர் பெண்கள் என்பதை அவர் தெளிவாக தெரிவித்துள்ளார்.