Home Featured தமிழ் நாடு அதர்மம் தோற்க வேண்டும் – ஆர்.கே.நகரில் ஜெயலலிதா பிரச்சாரம்!

அதர்மம் தோற்க வேண்டும் – ஆர்.கே.நகரில் ஜெயலலிதா பிரச்சாரம்!

582
0
SHARE
Ad

jayalalithaaசென்னை – தமிழக சட்டமன்றத் தேர்தலில், அதர்மமும், சந்தர்ப்பவாதமும், நாடகமும் தோற்க வேண்டும் என்று முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா கூறினார்.

ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் அவர், காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, கொடுங்கையூர் எழில் நகர் ஆகிய இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தை நேற்று மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:  2015-ஆம் ஆண்டு தேர்தலில் மகத்தான வெற்றி பெறச் செய்தீர்கள். இந்தத் தொகுதி மக்கள் எனது நெஞ்சில் நீங்காத இடம்பெற்றுள்ளீர்கள். இப்போதைய தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறேன்.

#TamilSchoolmychoice

கடந்த நூறாண்டுகளில் இல்லாத வகையில் பெருமழை கடந்த ஆண்டு கொட்டித் தீர்த்தது. சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. இந்தத் தொகுதியில் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. ஆர்.கே.நகரில் பாதிக்கப்பட்ட 97,411 குடும்பங்களுக்கு ரூ.48 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மக்களால் நான், மக்களுக்காகவே நான், உங்களால் நான், உங்களுக்காகவே நான். என் மீது உங்களுக்கு நம்பிக்கை. உங்கள் மீது எனக்கு அளவற்ற நம்பிக்கை. தர்மம் வெல்ல, அதர்மம் தோற்க, சத்தியம் வெல்ல, சந்தர்ப்பவாதம் தோற்க, நாடு வளம் பெற, நயவஞ்சகக் கூட்டம் அழிந்திட, நம்பிக்கை வெற்றி பெற, நாடகம் தோற்க மகத்தான வெற்றியை வழங்க வேண்டும்.

மக்கள் தான் என் மூச்சுக் காற்று. உங்களுக்காக உழைக்க மீண்டும் எனக்கு வாய்ப்பு தாருங்கள் என்றார் ஜெயலலிதா. எவ்வளவு பெருமழை பெய்தாலும் அந்த நீர் தேங்காத வகையில், மழைநீர் வடிகால் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜெயலலிதா பேசினார்.