தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கன்னியாகுமாரியில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
குமரி மாவட்டத்தில் போட்டியிடும் 6 பாஜக வேட்பாளர்கள், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் என மொத்தம் 17 பேருக்கு ஆதாரவாக அவர் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, கன்னியாகுமரி மக்களை கண்டதில் மகிழ்ச்சி.
குமரி மாவட்ட இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். முன்னேற்றம் தான் நம் பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரே தீர்வு.
வெள்ளத்தால் சென்னை மக்கள் பாதிக்கப்பட்டபோது மத்திய அரசு உடனே உதவி செய்தது. தேர்தலுக்காக மட்டும் ஏழை மக்களுக்கு பாஜக அரசு உதவி செய்யவில்லை. தலிபான்களால் தமிழக பாதிரியார் பிரேம் கடத்தப்பட்டபோது அவரை மத்திய அரசு பத்திரமாக மீட்டது.
கடந்த கால ஊழல்களை பதவிக்கு வந்த 2 ஆண்டுகளில் வெளிக்கொண்டு வந்துள்ளோம். 2ஜி, 3ஜி ஊழல் செய்தவர்கள் தமிழகத்தில் உள்ளனர். மும்பையில் கொத்தடிமைகளாக இருந்த தமிழக, கேரள பெண்களை மீட்டது மத்திய அரசு தான்.
தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியபோது அவர்களை மத்திய அரசு காப்பாற்றி அழைத்து வந்தது என பிரச்சாரம் செய்தார்.