Home Featured தமிழ் நாடு ஐஎஸ் காணொளியில் தமிழர்கள்: கடலூரைச் சேர்ந்த இருவரும் சிங்கப்பூரில் பணியாற்றியவர்கள்!

ஐஎஸ் காணொளியில் தமிழர்கள்: கடலூரைச் சேர்ந்த இருவரும் சிங்கப்பூரில் பணியாற்றியவர்கள்!

615
0
SHARE
Ad

ISISsகோலாலம்பூர் – சிரியாவில் இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு அண்மையில் வெளியிட்ட காணொளி ஒன்றில் இரு தமிழர்கள் உட்பட 11 இந்தியர்கள் இடம்பெற்றிருப்பது உலகிலுள்ள ஒட்டுமொத்த இந்தியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த வாரம், ‘தி லேண்ட் ஆப் ஹிந்த்: பெட்வீன் பெய்ன் அண்ட் ஹோப்’ என்ற பெயரில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் பிரசாரக் காணொளி, இணையதளத்தில் வெளியானது. 22 நிமிடம் ஓடக்கூடிய அந்தக் காணொளியில், தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட, 11 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அந்த இருவருமே கடலூரில் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

அந்தக் காணொளியில் காணப்படும் தமிழர் ஹாஜா பக்ருதீன் உஸ்மான் அலி கடலூரைச் சேர்ந்தவர். 6 ஆண்டுகளுக்கு முன்பு அவரும், அவரது குடும்பமும் சிங்கப்பூரில் குடியேறியதாகவும் கூறப்படுகின்றது.

ஹாஜா பக்ருதீன் கடந்த 2013 -ம் ஆண்டு, நவம்பர் மாதம், தனது குடும்பத்தோடு, சிரியாவில் குடியேற முயற்சி செய்துள்ளார். அந்த முயற்சி தோல்வியில் முடியவே, மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பி, கடந்த 2014 -ம் ஆண்டு, ஜனவரி மாதம் சிரியாவிற்குச் சென்று ஐஎஸ்-ல் இணைந்துள்ளார்.

அந்தக் காணொளியில் காணப்படும் மற்றொரு பயங்கரவாதியான குல் முகம்மது மரைக்காயரும் கடலூரைச் சேர்ந்தவர் தான். சிங்கப்பூரில் இருந்து கொண்டு ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டதால், 2014-ம் ஆண்டு சிங்கப்பூர் அரசு அவரை நாடு கடத்தியுள்ளது.

கடந்த வாரம் வெளியான அந்தக் காணொளி, 10 மாதங்களுக்கு முன் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

அந்தக் காணொளியில் அடையாளம் காணப்பட்டுள்ள இந்திய பயங்கரவாதிகளில் ஒருவனான, சாஜித், கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், கொல்லப்பட்டதாகவும் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த அரசு அதிகாரி ஒருவர் மூலமாக ஊடகங்களுக்குத் தகவல் கசிந்துள்ளது.