Home Featured தமிழ் நாடு இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப் பேரவை!

இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப் பேரவை!

665
0
SHARE
Ad

tamil-nadu-secretariat-tamil-nadu-assembly_சென்னை – பரபரப்புடன் நடந்து முடிந்த தமிழகத் தேர்தல்களைத் தொடர்ந்து, புதிய அமைச்சரவையும் ஜெயலலிதா தலைமையில் பதவியேற்றிருக்கும் நிலையில், இன்று காலை 11.00 மணிக்கு (இந்திய நேரப்படி) தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை முதல் முறையாகக் கூடுகிறது.

தற்காலிக அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செம்மலை புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.