Home இந்தியா விக்கிரவாண்டி இடைத் தேர்தல் : திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் : திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா

129
0
SHARE
Ad

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கான வெப்பம் தமிழ் நாட்டில் தணியும் முன்னரே விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 10-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்த சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான தனது வேட்பாளர் அன்னியூர் சிவா என திமுக தலைமை அறிவித்துள்ளது.

இதற்கான அறிவிப்பை திமுக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

தோழமைக் கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என தமிழக முதல்வரின் செய்திக் குறிப்பு தெரிவித்தது.

அன்னியூர் சிவா திமுக விவசாய தொழிலாளர் அணி செயலாளராக உள்ளார். விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி காலமானார்.

இதையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனுக்கள் பெறும் பணிகள் ஜூன் 14ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது.

வேட்புமனுதாக்கலுக்கான இறுதி நாள் ஜூன் 21 ஆகும்.

அதிமுகவும் விக்கிரவாண்டியில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.