
கோலாலம்பூர் : மலேசியாவில் நாடகத் துறையிலும் சினிமாத் துறையிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் படைப்புத் துறையிலும் நீண்ட காலம் சேவையாற்றி வந்த பிரபல இயக்குநரும் கலைஞருமான கே.விஜயசிங்கம் இன்று புதன்கிழமை (ஜூன் 12) காலை காலமானார். அவருக்கு வயது 79.
பல நாடகங்களையும், திரைப்படங்களையும் இயக்கியிருக்கும் அவர் நடிகர் சிவாஜி கணேசனிடம் பெரும் அபிமானம் கொண்டவர். அதன் காரணமாக சிவாஜி கணேசன் மலேசியக் கலைமன்றத்தைத் தோற்றுவித்து அதன் மூலம் பல நிகழ்ச்சிகளையும் சிவாஜி கணேசனின் பிறந்த நாள், நினைவு நாள் நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தி வந்தார்.
மேலும் பல இயக்கங்களிலும் தீவிர ஈடுபாடு கொண்டு செயலாற்றி வந்தவர் விஜயசிங்கம்.
அன்னாரின் மறைவுக்கு செல்லியல் குழுமத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.