Home Featured தொழில் நுட்பம் கூகுள் ‘ஸ்ட்ரீட் வியூ’ சேவைத் திட்டத்தை நிராகரித்தது இந்திய அரசு!

கூகுள் ‘ஸ்ட்ரீட் வியூ’ சேவைத் திட்டத்தை நிராகரித்தது இந்திய அரசு!

646
0
SHARE
Ad

Google-Street-Viewபுதுடெல்லி – கூகுள் நிறுவனம் தனது “ஸ்ட்ரீட் வியூ” சேவையை இந்தியாவில் நிறுவ செய்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

காரணம் இந்திய உள்துறை அமைச்சகம் கூகுளின் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டதாக அறிவித்துள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட 360 பாகையில் வீதிகள், நினைவுச் சின்னங்கள், மலைகள் மற்றும் ஆறுகளைக் காட்டும் இந்த வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்ய கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூகுள் விண்ணப்பித்தது.

#TamilSchoolmychoice

ஆனால் நாட்டின் பாதுகாப்பு குறித்து தற்காப்பு அமைச்சு சில எச்சரிக்கைகளை விடுத்ததை அடுத்து, கூகுளின் இந்த விண்ணப்பத்தை உள்துறை அமைச்சு நிராகரித்துள்ளது.

எனினும், தற்போது இந்தியாவின் முக்கியச் சுற்றுலாத் தளங்களான ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால் மற்றும் டெல்லியில் அமைந்திருக்கும் குதுப் மினார் நினைவுச் சின்னம் உள்ளிட்டவைகளைப் பார்வையிட தற்போது கூகுள் “ஸ்ட்ரீட் வியூ” வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.