Home Featured நாடு சுங்கை பெசார்: 9191 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணி வாகை சூடியது!

சுங்கை பெசார்: 9191 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணி வாகை சூடியது!

831
0
SHARE
Ad

சுங்கை பெசார் – எதிர்க்கட்சிக் கூட்டணிகளின் கைவசம் இருக்கும் சிலாங்கூர் மாநிலத்திலேயே, சுங்கை பெசார் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் 9,191 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் தேசிய முன்னணி தனது வலுவான அரசியல் சக்தியைக் காட்டியுள்ளது.

Sungei Besar by-election-victory

சுங்கை பெசாரில் தேசிய முன்னணி வேட்பாளர் புடிமான் முகமட் சோடியுடன் வெற்றிக் கொண்டாட்டத்தில் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன்..

#TamilSchoolmychoice

கட்சிகள் வாரியான வாக்கு விவரங்கள்:

தேசிய முன்னணி – 16,800

பாஸ் 6,902

பார்ட்டி அமானா நெகாரா – 7,609

சுங்கை பெசார் வெற்றியும் எதிர்க்கட்சிகளின் கோட்டையில் அதிர்ச்சி அலைகளைப் பரவச் செய்திருக்கின்றது. காரணம், கோலகங்சாரை விட அதிகப் பெரும்பான்மையில் தேசிய முன்னணி இங்கு வெற்றி பெற்றிருக்கின்றது.

9,191 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணி சுங்கை பெசாரில் வெற்றி பெற்றிருக்கின்றது.

இங்கேயும், எதிர்க்கட்சிகள் மொத்தமாக, 14,511 வாக்குகளைத்தான் பெற்றுள்ளன. இதைவிட 2,289 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ள தேசிய முன்னணி தெளிவான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.