Home Featured இந்தியா “யோகாவை வாழ்கையின் ஒரு பகுதியாக்கிக் கொள்ளுங்கள்” – மோடி உரை!

“யோகாவை வாழ்கையின் ஒரு பகுதியாக்கிக் கொள்ளுங்கள்” – மோடி உரை!

691
0
SHARE
Ad

Modiசண்டிகர் – பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற்ற 2-வது அனைத்துலக யோகா தினக் கொண்டாட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை மேற்கொண்டார்.

அவருடன் இணைந்து சுமார் 30,000 பேர் யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மோடி உரையாற்றுகையில், “அனைத்துலக யோகா தினத்திற்கு உலக நாடுகள் அனைத்தும் ஆதரவு அளித்துள்ளன. சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் யோகாவுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது. யோகாவின் பயன்கள் மற்றும் சக்தியை சிலர் அறியாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.”

#TamilSchoolmychoice

“யோகா வாழ்க்கையில் ஒழுக்கத்தை கற்றுத்தரும். யோகா மனம் மற்றும் மூளையை ஒன்றிணைக்கும். யோகா செய்பவர்கள் ஆரோக்கிய வாழ்வு வாழ்வர். முதலீடு இல்லாமல் கிடைக்கும் இப்பயனை அனைவரும் தினமும் கடைபிடிக்க வேண்டும். யோகாவை பயில ஏழை பணக்காரர், படித்தவர்- படிக்காதவர் என்ற பேதமில்லை. சிறந்த யோகா ஆசிரியர்களை உருவாக்கி உலகம் முழுவதும் யோகாவை பரப்ப வேண்டும்.” என்று மோடி தெரிவித்துள்ளார்.

இன்றைய வாழ்வில் செல்போன் எப்படி ஒரு பகுதியாகிப் போனதோ அது போல் யோகாவையும் வாழ்வில் ஒரு பகுதியாக்கிக் கொள்ளுங்கள் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், யோகாவை உலகம் முழுவதும் பரப்பி சேவையாற்றுவோரைக் கௌரவிக்கும் வகையில், அடுத்த ஆண்டு(2017) முதல் அனைத்துல அளவிலும், தேசிய அளவிலும் இரண்டு விருதுகள் வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.