Home Featured உலகம் எம்எச்370: மடகாஸ்காரில் பயணிகளின் உடமைகள் என நம்பப்படும் பொருட்கள் மீட்பு!

எம்எச்370: மடகாஸ்காரில் பயணிகளின் உடமைகள் என நம்பப்படும் பொருட்கள் மீட்பு!

540
0
SHARE
Ad

MH370(1)மடகாஸ்கார் – இந்தியப் பெருங்கடலில் மடகாஸ்கார் கரையோரப் பகுதியில் எம்எச்370 விமானத்தின் பாகங்களைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிலெயின் ஜிப்சான், தற்போது சுமார் 15 முதல் 20 பொருட்களைக் கண்டறிந்துள்ளார்.

MH370(2)அவை எம்எச்370 விமானத்தில் பயணம் செய்த பயணிகள் பயன்படுத்திய பொருட்களாக இருக்கலாம் என அவர் நம்புகின்றார்.

இது குறித்து ஜிப்சன் சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த தகவலில், இதற்கு முன்பு இதே பகுதியில் தான் கண்டறிந்த இரண்டு பாகங்களை ஆய்வு செய்த ஆஸ்திரேலிய அதிகாரிகள், அவை இரண்டும் கிட்டத்தட்ட எம்எச்370-ன் பாகங்கள் தான் என்பதை உறுதி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

MH370(4)மேலும், தற்போது கண்டறிந்துள்ள 15 முதல் 20 சிறிய பொருட்கள், பயணிகள் பயன்படுத்தியதாக இருக்கலாம் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூன் 7-ம் தேதி முதல் ஜூன் 16-ம் தேதி வரையில், அப்பொருட்களை மீட்டுள்ள அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

MH370(3)அப்பொருட்களை மலேசியா மற்றும் ஆஸ்திரேலிய அதிகாரிகள், பயணிகளின் உறவினர்களிடம் காட்டி அதனை அடையாளம் காண்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.