இஸ்தான்புல் – புதன்கிழமை அதிகாலை மும்முனைகளில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட இஸ்தான்புல் நகரின் அதாதுர்க் விமான நிலையத்தின் ஒரு பகுதி இன்று மீண்டும் சேவைகளுக்காக திறக்கப்பட்டது.
குண்டுவெடிப்பில் இதுவரை 41 பேர் பலியாகியுள்ளனர். 239 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 109 பேர் சிகிச்சைகளுக்குப் பின்னர் மருத்துவமனைகளில் இருந்து இல்லம் திரும்பினர்.
இறந்தவர்களில் 13 பேர் வெளிநாட்டவர்களாவர்.