Home Featured தமிழ் நாடு “எனது கருத்தல்ல! மற்றவர் சொன்னதைப் பகிர்ந்தேன்” – சுவாதி கொலை விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுக் கொண்ட...

“எனது கருத்தல்ல! மற்றவர் சொன்னதைப் பகிர்ந்தேன்” – சுவாதி கொலை விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுக் கொண்ட ஒய்.ஜி.மகேந்திரன் விளக்கம்!

715
0
SHARE
Ad

Mahendran YGசென்னை – சுவாதி கொலை தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் தான் வெளியிட்ட கருத்துக்கள் தனது சொந்த கருத்துக்கள் அல்ல என்றும், மற்றவர்கள் தனக்கு அனுப்பிய ஒரு கருத்தைத்தான் தனது முகநூலில் பகிர்ந்து கொண்டதாகவும் விளக்கம் தந்துள்ள நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் (படம்) தனது செயலுக்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக தனது முகநூல் பக்கத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய பதிவால் பலத்த கண்டனங்களுக்கு அவர் உள்ளானார்.

இதனைத் தொடர்ந்து அவர் மன்னிப்பு கோரியுள்ளார். அத்துடன் தனது முகநூல் பதிவையும் அவர் உடனடியாக நீக்கி விட்டார்.

#TamilSchoolmychoice

எங்கிருந்தோ வந்த பதிவை மட்டுமே தான் பகிர்ந்தாகவும், அந்த பதிவு தனது சொந்த கருத்தல்ல என்றும் விளக்கம் அளித்துள்ள மகேந்திரன் தனது பகிர்வால் யாரேனும் மனம் புண்பட்டிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் ஒய்.ஜி. மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சென்னை தியாகராய நகரில் உள்ள மகேந்திரனின் வீட்டிற்கு இன்று காலை முதல் சென்னை காவல் துறையினர் பாதுகாப்பை வழங்கியுள்ளனர்.