Home Featured உலகம் யூரோ : வேல்ஸ் நாட்டை 2-0 கோல்களில் வென்று இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல்!

யூரோ : வேல்ஸ் நாட்டை 2-0 கோல்களில் வென்று இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல்!

856
0
SHARE
Ad

euro-portugal-wales-scoreபாரிஸ்: நேற்று நடைபெற்ற (மலேசிய நேரப்படி இன்று அதிகாலை) அரை இறுதி ஆட்டத்தில் 2-0 என்ற கோல் எண்ணிக்கையில், வேல்ஸ் நாட்டை வென்று இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல் நுழைந்துள்ளது.

பிரிட்டனின் ஒரு மாநிலப் பிரதேசமான வேல்ஸ், ஐரோப்பியக் காற்பந்து போட்டிகள் என்று வரும்போது தனி நாடாகப் போட்டியில் இறங்கும். மற்றொரு மாநிலமான ஸ்காட்லாந்தும் இதே போன்றுதான் தனியாகப் போட்டியிடும்.

முதன் முறையாக அரை இறுதி ஆட்டம் வரை வேல்ஸ் வந்திருக்கின்றது என்பது மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

#TamilSchoolmychoice

போர்ச்சுகலின் இரண்டு கோல்களில் முதல் கோலை முன்னணி ஆட்டக்காரர் ரொனால்டோவும், இரண்டாவது கோலை நானியும் அடித்தனர்.

இன்று நடைபெறும் பிரான்ஸ் – ஜெர்மனி இடையிலான மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் வெல்லும் நாட்டுடன் போர்ச்சுகல் இறுதி ஆட்டத்தில் மோதும்.euro-portugal-wales-ronaldo

போர்ச்சுகல் இறுதி ஆட்டத்தில் கால் பதிக்கப் போகும் உற்சாகத்தில் ரொனால்டோவும் அவரது குழுவினரும்…

போர்ச்சுகல் இறுதி ஆட்டத்தில் கால் பதிப்பதும் அந்நாட்டுக்காக விளையாடுவதும் முன்னணி ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டாவைப் பொறுத்தவரை உணர்ச்சி பூர்வமான தருணமாகும்.

காரணம், இதற்கு முன் போர்ச்சுகல் 2004ஆம் ஆண்டில், ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் கிரீஸ் நாட்டுடன் கடைசியாக மோதியபோது 1-0 கோல் எண்ணிக்கையில் தோல்வியடைந்து வெளியேறியது. அந்த ஆட்டத்தில் அப்போது 19 வயது விளையாட்டாளராக கண்ணீருடன் தோல்வியில் வெளியேறிய ரொனால்டோ, இந்த முறை இறுதி ஆட்டத்தில் ஐரோப்பியக் கிண்ணத்தைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடுவாரா என்பதைக் காண காற்பந்து இரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நடந்து கொண்டிருக்கும் ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் இதுவரை 9 கோல்களை அடித்திருக்கின்றார் ரொனால்டோ. இதற்கு முன் இந்த சாதனையைப் புரிந்தது பிரான்ஸ் நாட்டின் ஆட்டக்காரர் மைக்கல் பிளாட்டினிதான்.

இறுதி ஆட்டத்திலும் ரொனால்டோ கோல் அடித்துவிட்டால், அதன் மூலம் ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் அதிகமான கோல்களை அடித்தவர் என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெறுவார்.