Home உலகம் ஈரோ 2020 : டென்மார்க் 4-0 கோல்களில் வேல்சை வீழ்த்தி கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்

ஈரோ 2020 : டென்மார்க் 4-0 கோல்களில் வேல்சை வீழ்த்தி கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்

482
0
SHARE
Ad

ஆம்ஸ்டர்டாம் : கடந்த இரண்டு வாரங்களாக குழுக்கள் அளவிலான ஈரோ 2020 காற்பந்து போட்டிகள் நடைபெற்று ஒரு முடிவுக்கு வந்துள்ளன. தற்போது 16 குழுக்கள் 2-வது சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன.

இந்த 16 குழுக்களுக்குள் முதல் ஆட்டமாக நேற்று சனிக்கிழமை ஜூன் 26 முதல் ஆட்டம் டென்மார்க்- வேல்ஸ் குழுக்களுக்குள் இடையில் நடைபெற்றது (மலேசிய நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு 12.00 மணி).

நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டென்மார்க் மிகச் சிறப்பாக விளையாடி 4-0 கோல் எண்ணிக்கையில் வேல்ஸ் குழுவை வீழ்த்தியது.

#TamilSchoolmychoice

கடந்த 17 ஆண்டுகளில் இப்போதுதான் டென்மார்க் முதன் முறையாக ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் கால் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளது.

வேல்ஸ், பிரிட்டனின் ஒரு மாநிலம் – வட்டாரம் என்றாலும் பாரம்பரியமாகக் காற்பந்து என்று வரும்போது வேல்ஸ் தனி ஒரு குழுவாக அனைத்துலகக் காற்பந்து போட்டிகளில் பங்கேற்பது வழக்கமாகும்.

அடுத்த சுற்றுக்குத் தேர்வான 16 குழுக்கள்

மொத்தம் 24 நாடுகள் கலந்து கொண்ட ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் அந்த நாடுகள் ஒரு பிரிவுக்கு 4 நாடு என்ற கணக்கில் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.

இதில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த 2 குழுக்கள் என்ற அளவில் 12 நாடுகள் 6 பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டன.

மேலும் சிறந்த 3 இடத்தைப் பெற்ற 4 குழுக்களும் கூடுதலாகத் தேர்வு செய்யப்பட்டன.

தேர்வு செய்யப்பட்ட இந்த 16 குழுக்களுக்கு இடையிலான போட்டிகள் நேற்று சனிக்கிழமை ஜூன் 26 முதல் தொடங்கின.

6 பிரிவுகளில் சிறந்த குழுக்களாகத் தேர்வு பெற்ற 6 நாடுகள் பின்வருமாறு:

  1. இத்தாலி
  2. பெல்ஜியம்
  3. நெதர்லாந்து
  4. இங்கிலாந்து
  5. சுவீடன்
  6. பிரான்ஸ்

6 பிரிவுகளில் சிறந்த 2-வது குழுவாகத் தேர்வான 6 நாடுகள் பின்வருமாறு:-

  1. வேல்ஸ்
  2. டென்மார்க்
  3. ஆஸ்திரியா
  4. குரோஷியா
  5. ஸ்பெயின்
  6. ஜெர்மனி

பிரிவுகளில் சிறந்த 3-வது குழுவாகத் தேர்வாகும் நாடுகள் :-

  1. சுவிட்சர்லாந்து
  2. செக் குடியரசு
  3. உக்ரேன்
  4. போர்ச்சுகல்

அடுத்து 16 குழுக்களுக்குள் இடையிலான போட்டிகள் பின்வருமாறு நடைபெறும்:

26/06: வேல்ஸ் – டென்மார்க் (நடைபெறும் இடம் ஆம்ஸ்டர்டாம்)

26/06: இத்தாலி – ஆஸ்திரியா (நடைபெறும் இடம் இலண்டன்)

27/06: நெதர்லாந்து – செக் குடியரசு (நடைபெறும் இடம் புடாபெஸ்ட்)

27/06: பெல்ஜியம் – போர்ச்சுகல் (நடைபெறும் இடம் செவில்)

28/06: குரோஷியா – ஸ்பெயின் (நடைபெறும் இடம் கோப்பன்ஹேகன்)

28/06: பிரான்ஸ் – சுவிட்சர்லாந்து (நடைபெறும் இடம் புச்சாரெஸ்ட்)

29/06: இங்கிலாந்து – ஜெர்மனி (நடைபெறும் இடம் இலண்டன்)

29/06: சுவீடன் – உக்ரேன் (நடைபெறும் இடம் கிளாஸ்கோ)