Home Featured உலகம் தென் சீனக் கடலில் சீனாவுக்கு உரிமையில்லை” அனைத்துலக நீதிமன்றம் தீர்ப்பு

தென் சீனக் கடலில் சீனாவுக்கு உரிமையில்லை” அனைத்துலக நீதிமன்றம் தீர்ப்பு

650
0
SHARE
Ad

Spratly Islands-south china seaஹேக் (நெதர்லாந்து) – தென்சீனக் கடலில் சீனா நடத்தி வரும் அத்து மீறல், ஸ்பிராட்லி தீவுகள் மீதான உரிமை கோரல்கள் ஆகியவை தொடர்பில் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் நெதர்லாந்திலுள்ள ஹேக் நகரிலுள்ள அனைத்துல நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வரலாற்றுபூர்வமாக சீனாவுக்கு தென் சீனக் கடல் பகுதியில் உரிமை ஏதும் இல்லை என்று அனைத்துலக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு சீனாவுக்கு உலக அரங்கில் பலத்த பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றது.

தென் சீனக் கடலில் உள்ள ஸ்பிராட்லி தீவுகள் பகுதியை பிலிப்பைன்ஸ், மலேசியா, சீனா, உள்ளிட்ட பல நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன.

#TamilSchoolmychoice

சீனா அனைத்துலக நீதிமன்றத்தின் முன்னிலையில் ஒரு வழக்குக்காக முன்னிறுத்தப்படுவது இதுதான முதன் முறையாகும்.

இருப்பினும் அனைத்துலக நீதிமன்றத்தின் தீர்ப்பு தன்னைக் கட்டுப்படுத்தாது என சீனா அறிவித்துள்ளது.