Home Featured உலகம் இத்தாலி இரயில் விபத்து இறுதி நிலவரம் : பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!

இத்தாலி இரயில் விபத்து இறுதி நிலவரம் : பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!

619
0
SHARE
Ad

ரோம் – இத்தாலியின் தென் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை ஒரே தண்டவாளத் தடத்தில் இரண்டு இரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் மரண எண்ணிக்கை 25 ஆக  உயர்ந்துள்ளது.

italy-train clash-site

  • மீட்புக் குழுவினரின் இயந்திரங்களும் வாகனங்களும் நெருங்குவதற்கு மிகவும் சிரமமான பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதால், மீட்புப் பணிகளில் தாமதமும், சிரமங்களும் ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
  • நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இத்தாலியப் பிரதமர் மத்தியோ ரென்சி விபத்து நடந்த இடத்திற்கு வருகை தந்து நிலைமையை நேரில் கண்டறிந்தார்.

Renzi-Italian PM-visiting Train crash

#TamilSchoolmychoice

இத்தாலியப் பிரதமர் மத்தியோ ரென்சி இரயில் விபத்து நடந்த இடத்திற்கு நேரடியாக வந்து நிலைமையைக் கண்டறிந்தபோது…(படம்: நன்றி – இத்தாலியப் பிரதமர் ரென்சி டுவிட்டர் பக்கம்)