Home Featured நாடு பினாங்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொலை!

பினாங்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொலை!

765
0
SHARE
Ad

BALIK PULAUபாலே புலாவ் – 2 வயது சிறுமி உட்பட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பத்து மாவுங் பகுதியை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

பத்து மாவுங் பகுதியில் உள்ள கொழி பதப்படுத்தும் தொழிற்சாலையில், கொள்கலன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அந்த நால்வரும் சுடப்பட்டுள்ளனர்.

32 வயதான மர்ம நபர், போதைப் பொருள் பயன்படுத்திய நிலையில், இன்று அதிகாலை 2.55 மணியளவில் அந்தக் கொள்கலன் வீட்டிற்குள் நுழைந்து உறங்கிக் கொண்டிருந்த அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

தற்போது பினாங்கு காவல்துறை இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றது.